search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காங்கிரஸ் புகார்"

    • காமராஜர் போல் வேடமணிந்து துண்டு பிரசுரங்களை வழங்கியதற்கு காங்கிரசார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
    • நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், பாதயாத்திரை வரும் அண்ணாமலைக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் கருப்பு கொடி காட்டப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.

    பல்லடம்:

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற பாதயாத்திரை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இன்று பல்லடம் நகருக்கு வர உள்ளார். இதன் விளம்பர துண்டு பிரசுரங்களை பல்லடம் கடைவீதியில் பாஜகவினர் விநியோகம் செய்தனர்.இதில் காமராஜர் போல் வேடமணிந்து துண்டு பிரசுரங்களை வழங்கியதற்கு காங்கிரசார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.மேலும் இது குறித்து அவர்கள் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.பல்லடம் காங்கிரஸ் நகர தலைவர் ஈஸ்வரமூர்த்தி, திருப்பூர் மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் எம். மணிராஜ்,காங்கிரஸ் பல்லடம் வட்டார தலைவர் சு.கணேசன், நகர வர்த்தக அணி தலைவர் ஆர். சுரேஷ் உள்ளிட்டோர் பல்லடம் போலீஸ் நிலையத்தில் நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

    பல்லடத்திற்கு இன்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வருகையையொட்டி முன்னாள் முதல்வர் காமராஜர் வேடமிட்ட நபரை அழைத்து சென்று பாஜக.வினர் கடைவீதியில் துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தனர்.காமராஜர் மதசார்பின்மை கொள்கை உடையவர். அவரது வேடத்தை கொள்கை வேறுபாடு கொண்ட பாஜக.வினர் பயன்படுத்துவது நியாயம் அல்ல.மேலும் கடைசி வரை காங்கிரஸ் கட்சியில் இருந்து தான் மறைந்தார். அடிப்படைக் கொள்கையில் மாறுபட்ட தலைவரை சுயநலத்திற்காக பயன்படுத்துவது தவறு.காமராஜர் எந்த சமயத்திலும் மதத்தையோ,மக்களை பிரிவு படுத்தும் செயல்களுக்கோ ஒருபோதும் அனுமதித்ததில்லை.அப்படிப்பட்ட தலைவரை மதத்தை தீவிரமாக பின்பற்றும் கட்சியினர் பயன்படுத்தியது முற்றிலும் தவறானது.எனவே இது குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.மேலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், பாதயாத்திரை வரும் அண்ணாமலைக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் கருப்பு கொடி காட்டப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.

    ×